அரசாங்கத்தின் மீது திலித் ஜயவீர குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் மீது திலித் ஜயவீர குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக செயல்படுவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் தொழில்முனைவோருமான திலித் ஜயவீர விமர்சித்துள்ளார். 

இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் வரி விதிப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக ஆட்சிக்கு வருவதற்கு முன் வெளியிடப்பட்ட அறிக்கைகள் கேள்விக்குரியவை என சுட்டிக்காட்டினார். 

திலித் ஜயவீர மேலும் கூறுகையில், “மக்கள் எதிர்பார்த்த அனைத்தையும் அரசாங்கம் உதைத்துவிட்டது என்பது தெளிவாகிறது. ஜனாதிபதி ‘வரி இளவரசர்’ என முத்திரை குத்தப்பட்டுள்ளார். முன்பு வரிகள் குறித்து அவர்கள் பேசியது வேறு, இப்போது பேசுவது வேறு. IMF பெயரில் விதிக்கப்படும் வரிகள், ரணில் விக்கிரமசிங்க திட்டத்தைப் பின்பற்றி, மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது,” என்றார்.

manel

Related Posts