தெங்கு உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம்
தேங்காய் விலை அதிகரிப்பு, தென்னை பயிர் செய்கை வீழ்ச்சி உள்ளிட்ட பல பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தென்னை பயிர் செய்கை சபை , தெங்கு உற்பத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தீர்மானித்துள்ளது.
தென்னை பயிர் செய்கை சபை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தென்னங்கன்றுகளை வழங்குதல், குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குதல், மற்றும் வீட்டுத் தோட்ட விவசாயிகளுக்கு இலவச தென்னை கன்றுகளை வழங்குதல் போன்ற திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவுள்ளது.

