சிறு தேயிலை உற்பத்தி கிராமங்களை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை

சிறு தேயிலை உற்பத்தி கிராமங்களை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஐந்நூறு சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் எனவும் தேயிலையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள சிறு தேயிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தேயிலை தொழிற்துறையை முன்னேற்றுவதாகக் குறிப்பிட்டு சர்வதேச நாடுகளில் விளம்பரங்கள் வெளியிடுவதற்காக மாத்திரம் 1965 இலட்சம் ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளது.

உலக வங்கியிடம் மாத்திரம் 48.9 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 60 வேலைத்திட்டங்கள் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

manel

Related Posts