பஸ்விபத்தில் உயிர் நீந்தவர்களுக்கு பிரதி அமைச்சர் இரங்கல்

பஸ்விபத்தில் உயிர் நீந்தவர்களுக்கு பிரதி அமைச்சர் இரங்கல்

நுவரெலியா கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் நேற்றைய தினம்( 11.05.2025.) ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 500அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 21 பேர் வரை உயிரிழந்ததுடன் பலர் படும் காயமடைந்த செய்தி முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எத்தனையோ கனவுகள் எதிர்பார்ப்புகள் மத்தியில் பயணித்த எமது உறவுகள் எதிர்பாராத விதமாய் நடந்து விபத்தில் உயிர் நீத்துள்ளமை மனதுக்கு வேதனை அழிக்கின்றது உயிரிழந்த எம் உறவுகளுக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் என்ற ரீதியில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு, காயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் உறவுகள் வெகு விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக வீடு திரும்ப நாம் அனைவரும் இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வோம்.

தற்போது இலங்கையில் தினமும் இவ்வாறான விபத்துக்கள் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது, நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து எமது அரசாங்கம் மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளது என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அன்பான வாகன சாரதிகளே உயிர் என்பது விலைமதிப்பில்லாத ஒன்று தங்களை நம்பி வாகனத்தில் ஏறும் ஒவ்வொருவருடைய உயிரையும் பாது காத்து சரியான இடத்தில் கொண்டு சேர்க்க வேண்டியது எமது தலையாய கடமையாகும் நாம் எமது பணியை பொறுப்புணர்வோடு செயற்படுத்தி சட்ட திட்டங்களை மதித்து வாகனங்களை செலுத்துமாறு மிக அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக உதவி தொகையை வழங்க எமது அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த பணத்தினால் இழந்த உயிர்களை மீட்க முடியாது என்றாலும் அத்தொகை குடும்பங்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் என நம்புகின்றேன்.மேலும் , ஜனாதிபதியினால், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அனைத்து வைத்தியசாலைகளை தயார்படுத்தப்பட்டு,

இது தொடர்பாக தேவையான அனைத்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவும் பாதுகாப்புப் படையினருக்கும் சுகாதார பிரிவுகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இந்த கோர விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக வீடு திரும்ப எமது பிரார்த்திக்கின்றோம்.

சுந்தரலிங்கம் பிரதீப் பிரதி அமைச்சர்பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்

manel