பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ X கணக்கில் இரங்கலை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் இலங்கை மக்கள் சார்பாக பாப்பரசருக்கு தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும்  அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயத்திற்காக அவரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஜனாதிபதியின் X கணக்கில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அவரது கருணை, நீதி மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றின் மரபு எதிர்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

manel