இலங்கை விமான சேவையில் இடம்பெற்ற ஊழல்கள்

இலங்கை விமான சேவையில் இடம்பெற்ற ஊழல்கள்

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தில், கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி விசேட விசாரணை குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

2010 – 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றதாக கருதப்படும் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளை கண்டறிந்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக முன்னாள் கணக்காய்வாளர் தலைமை அதிபதி எச்.எம். காமினி விஜேசிங்க தலைமையிலான ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இதேவேளை குறித்த நிறுவனத்தை நடத்தி செல்வதற்கு அரசுக்கு அதிக செலவுச்சுமை நேரிட்டுள்ளமையால், ஆண்டுதோறும் ஏற்படுகின்ற அதிக நட்டத்தை தாங்கிக்கொள்ள முடியாத சுழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

manel