கட்சித் தீர்மானத்தை மீறிய ஐ.ம.சவின் 6 உறுப்பினர்கள் இடைநிறுத்தம்
பேருவளை நகர சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவின்போது, கட்சியின் தீர்மானத்துக்கு புறம்பாக செயற்பட்டமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுவின் தீர்மானத்துக்கு அமைய பேருவளை நகர சபையின் நிர்வாகத் தெரிவின்போது, குழுவினரை வழிநடத்தாமை மற்றும் கட்சித் தீர்மானத்துக்கு புறம்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளிட்டமை தொடர்பில், பேருவளை தொகுதி அமைப்பாளர் மொஹமட் இப்திகாரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

