துன்பத்திலும் இலங்கைக்கு ஓர் இன்பம்
அமெரிக்காவின் 30 சதவீத வரி அமுல்படுத்தப்படவுள்ள ஆகஸ்ட் முதலாம் திகதி வரையில், அந்த நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய வரி தொடர்பில் அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கே அதிகளவான வரி குறைப்பை அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார் எனவும் நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

