இன்று சர்வதேச சமூக வலைத்தளங்கள் தினம்

இன்று சர்வதேச சமூக வலைத்தளங்கள் தினம்

தொடர்பாடலும் தகவல் பரிமாற்றத்துக்குமான ஒரு பெரிய புரட்சி சமூக வலைத்தளங்களால் உருவாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 30 அன்று சமூக வலைத்தள தினம் (Social Media Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சமூக வலைத்தளங்களின் தாக்கம் மற்றும் அதன் பயன்களை நினைவூட்டும் வகையில் உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகக் கருதப்படுகிறது. 

சமூக வலைத்தளங்கள் என்றால் என்ன? 

சமூக வலைத்தளங்கள் என்பது, இணையத்தின் மூலம் உலக மக்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும், தகவல்களைப் பகிரும், கருத்துகள் பரிமாறும் தளங்கள் ஆகும். இவற்றில் உதாரணமாக Facebook, X, Instagram, YouTube, LinkedIn, TikTok ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம். 

சமூக வலைத்தளங்களின் சிறப்புகள்: 

உலகம் ஒரு கிராமமாகும்: சமூக வலைத்தளங்கள் மூலம் எங்கு இருந்தாலும் நம்மை விரைவாக மற்றவருடன் இணைக்க முடிகிறது. அறிவுத் தரவுகள் பரிமாற்றம்: கல்வி, செய்தி, தொழில், ஆராய்ச்சி போன்ற துறைகளில் தகவல்களை விரைவில் பகிர முடிகிறது. 

தொழில் வளர்ச்சிக்கு உதவுகிறது: நிறுவனங்கள், சிறு தொழில்கள், உற்பத்தியாளர்கள் தங்களது சேவைகள், பொருட்களை விளம்பரப்படுத்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். 

படைப்பாற்றலுக்கு மேடை: நகைச்சுவை, பாடல், நடனம், ஓவியம் போன்ற கலைகளை பகிர அனைத்து மக்களுக்கும் வாய்ப்பு வழங்குகிறது. 

பாதகப்பாடுகளும் உள்ளன: 

தவறான தகவல்கள் பரவல்: உண்மைதான் என நினைத்து சிலர் தவறான தகவல்களை பகிர்வதால் சமூகம் பாதிக்கப்படுகிறது. மேலும் படிப்பு, வேலை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றில் மூதான கவனம் சிதறுகிறது. 

manel