சிராஜ் குறித்து இங்கிலாந்து மன்னர் எழுப்பிய கேள்வி

சிராஜ் குறித்து இங்கிலாந்து மன்னர் எழுப்பிய கேள்வி

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

இதன்படி 3 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி 2-1 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

இந்தநிலையில் இந்திய வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர், வீராங்கனைகள் இங்கிலாந்தின் மூன்றாம் மன்னர் சார்லசை நேற்று லண்டனில் சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பின்போது “சிராஜ் ஆட்டமிழந்த தருணம் எப்படி இருந்தது” என இங்கிலாந்து மூன்றாம் மன்னர் சார்லஸ் தன்னிடம் வினவியதாக சுப்மன் கில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு,’லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முடிவு துரதிஷ்டவசமானது. அடுத்த 2 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முடியும் என நம்புகிறோம், என பதிலளித்தாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

manel