சமனலவெவ நீர் தேக்கத்தில் வினோத சுற்றுலா படகு சேவை
பலாங்கொடை பெலிஹுல் ஓயா சுற்றுலா பிரதேசத்தில் உள்ள சமனலவெவ நீர் தேக்கத்தில் வினோத சுற்றுலா படகு சேவை பலாங்கொடை இம்புல்பே பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.வசன்த புஷ்பகுமார ஆரம்பித்து வைத்தார்.



உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இந்த வினோத சுற்றுலா படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பயணிகள் மற்றும் பிரதே மக்களுக்களின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும்அதிகரிக்கும் நோக்கத்துடன் இம்புல்பே பிரதேச அபிவிருத்தி குழுவின் ஆலோசனைக்கு அமையவே இந்த வினோத படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பெலிஹுல் ஓயா சுற்றுலா தளத்தில் அமைந்திருக்கும் (Adventure) நிறுவனம் மற்றும் பெலிஹுல்ஓயா சுற்றுலா சங்கத்தின் அனுசரணையில் இந்த சுற்றுலா வினோத படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வினோத படகு சேவை ஆரம்ப நிகழ்வில்இரத்தினபுரி மாவட்ட செயலாளர்,இம்புல்பே பிரதேச சபை அதிகாரிகள்.சமனலவெவ காவல் துறையினர், சமனலவெவ நீர் தேக்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

