உப்புக்கான விலை நிர்ணயிக்கப்பட்டதா?
உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலை இதுவரையிலும் நிர்ணயிக்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபைக்கும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன.
இவ்வாறு பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், அவ்வாறான எந்தவொரு கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

