அஹமதாபாத் விமான விபத்து ஜனாதிபதி அனுர இரங்கல்

அஹமதாபாத் விமான விபத்து ஜனாதிபதி அனுர இரங்கல்

அஹமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளான செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த வருந்தமடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமது எக்ஸ் தளத்தில் இரங்கல் செய்தியைத் தெரிவித்துள்ளார். 

விமான விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார். 

இந்த ஆழ்ந்த துயரமான தருணத்தில், இலங்கை மக்கள் இந்தியாவுடன் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் எனவும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

manel

Related Posts