திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கு பிரதி அமைச்சர் இரங்கல்
உலகளாவிய ரீதியில் வாழும் கத்தோலிக்க மக்களின் போற்றுதற்குரிய 226 வது புனித திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் தனது 88ஆவது வயதில் இறையடி எய்தினார்.
அவருடைய மறைவு கத்தோலிக்க மக்களுக்கு மட்டுமல்லாது உலக வாழ் அனைத்து மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.என பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரதியமைச்சர் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் உலகில் அன்பு, சமாதானம், சகோதரத்துவத்தினை நிலைநாட்ட புனித பாப்பரசர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதுடன், சமூகத்தில் அனைவரும் சமமானவர்கள் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
நோய்வாய்ப்பட்டு சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை கூட வீடு தேடி சென்று பரிவுடன் அரவணைத்து வந்த புனித பாப்பரசர் கத்தோலிக்க திருச்சபையையும் தாண்டி முழு உலக மக்களையும் தன் அன்பால் அரவணைத்துக் கொண்டவர்.
புனித பாப்பரசரின் ஆன்மா நித்தியத்துக்குள் இளைப்பாரட்டும்.
பாப்பரசரின் மரபு நம்மை நீதியான அமைதியான மற்றும் இரக்கம் நிறைந்த உலகத்தை நோக்கி தொடர்ந்து வழிநடத்தும் என பிரதிய அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

