களுத்துறை மாவட்ட மக்களை சந்தித்த பிரதி அமைச்சர்
தென்னிலங்கையின் காலி ,களுத்துறை, மாத்தறை போன்ற மாவட்டங்களில் தோட்டப்புறங்களில் வாழும் மலையக கடந்த ஆட்சி காலங்களில் ஒரு நிரந்தர அரசியல் தலைமைத்துவமின்மையினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அடிப்படை தேவைகளைகூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத மிகவும் பின் தள்ளப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றார்கள்.




எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மலையக மக்கள் குறித்து கவனம் செலுத்துகின்ற அதேவேளை பின் தள்ளப்பட்ட மாவட்டங்களில் வாழுகின்ற மலையக மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி வருகின்றது.
அந்த வகையில் கடந்த (15 /6 /2025)அன்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் களுத்துறை மாவட்டம் ஹொரனபிரதேச சபைக்கு உட்பட்ட றைகம தோட்டம் புளத்சிங்கள ஹல்வத்துறை தோட்டப்புற மக்களை நேரில் சந்தித்து அவர்கள் பிரச்சனைகளை குறித்து விரிவாக கலந்துரையாடியதோடு,
அது சம்பந்தமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.





மேலும் களுத்துறை மாவட்ட ஹொரன தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி கனிஷ்ட வித்யாலயாலயம் / ஹல்வத்துறைதமிழ் வித்தியாலயம்/ விபுலானந்தா தமிழ் பாடசாலைகளை சார்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் போன்றவர்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை குறித்து கலந்துரையாடியதோடு,
மேலும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்வி சார், மற்றும் பௌதிக மனிதவள பிரச்சனைகள் குறித்து முழுமையாக ஆராய்ந்ததோடு முழு மலையககல்விசார் பிரச்சினைகளுடன் ஒப்பிடும்போது மேல் மாகணத்தில் உள்ள களுத்துறை மாவட்ட தோட்ட பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளில் பிரச்சனைகள் மிக மோசமான நிலைமை காணப்படுவதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
இவ் மக்கள் சந்திப்பின் போது களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒஷானி உமாங்க ஹொரன பிரதேச சபை தலைவர் நிர்மலபிரதேச உறுப்பினர் துஷாந்த் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

