மின்சாரம் தாக்கிய மகனை காப்பாற்ற முயன்ற தாயும் பலி

மின்சாரம் தாக்கிய மகனை காப்பாற்ற முயன்ற தாயும் பலி

சூரியவெவ, ரந்தியகம வீரியகம பகுதியில் மின்சாரம் தாக்கி தாயும் மகனும் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சூரியவெவ, வீரியகம பகுதியில் வசிக்கும் ஒரு தாயும் அவரது ஐந்து வயது மகனும் இன்று (05) மாலை அண்டை வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சட்ட விரோத மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்ததாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்த குழந்தை அருகிலுள்ள வீட்டிற்கு சிறு குழந்தைகள் பயன்படுத்தும் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, ​​சட்டவிரோத மின் கம்பியில் சிக்கிக் கொண்டதாகவும், மகனைக் காப்பாற்ற சம்பவ இடத்திற்கு ஓடிய தாயும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்தான மல்லிகை விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்

manel