மயிரிழையில் தப்பித்த மஞ்சள் கடவையில் மாறும் பயணிகள்..!

மயிரிழையில் தப்பித்த மஞ்சள் கடவையில் மாறும் பயணிகள்..!

கம்பளை நகரில் இருந்து நாவலப்பிட்டி பிரதான வீதியில் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கம்பளை இலங்கை போக்குவரத்து பஸ் தரிப்பிடத்திற்க்கு முன்பாக அதிகமான மக்கள் பாதை கடக்கும் மஞ்சள் கடவை அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மஞ்சள் கடவையில் கடந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்து மின்கம்பத்தில் மோதி உள்ளதோடு வாகன சாரதி குறித்த விபத்தை தனது கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்து மஞ்சட்கடவையில் கடந்த பயணிகளுக்கு ஏற்பட இருந்த விபத்தை தடுத்துள்ளார்.

விபத்து குறித்தான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னேடுத்துள்ளனர்.

manel