பராட்டே சட்டத்திற்கான சலுகை காலம் நீடிப்பு
பராட்டே சட்டத்தை அமுல்படுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிதி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 25 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான கடனை பெற்றுள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்காக 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த சலுகை காலம் கிடைக்கும்.
இதற்கிடையில், 25 மில்லியன் முதல் 50 மில்லியனுக்கும் இடையில் கடன் பெற்றுள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்காக 2025 செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டுள்ளதுடன், 50 மில்லியனுக்கும் அதிகளவான கடனை பெற்றுவர்களுக்கு 2025 ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

