பாணந்துறை துப்பாக்கி சூட்டுக்கான காரணம் வெளியானது

பாணந்துறை துப்பாக்கி சூட்டுக்கான காரணம் வெளியானது

பாணந்துறை மாலமுல்ல பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது. 

போதைப்பொருள் கடத்தல்காரரான பாணந்துறை குடு சலிந்து மற்றும் நிலங்க ஆகியோருக்கு இடையில் நீண்டகாலமாக நிலவிய முரண்பாடு காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவத்தின்போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பாணந்துறை குடு சலிந்து என்றழைக்கப்படும் சலிந்து மல்ஷித்த குணரத்ன என்பவரின் உதவியாளரான, ஹசித துலாஜ் என்பவர் காயமடைந்துள்ளார். 

இதனையடுத்து, மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதான அவர், பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உந்துருளியில் பயணித்த இரண்டு துப்பாக்கித்தாரிகள், வீடொன்றிற்கு சென்று, ஜன்னலுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதன் பின்னர், அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் 03 காவல்துறை குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. 

இதேவேளை இலங்கையில் 2025 ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்,61 துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. 

அந்த சம்பவங்களில் 35 பேர் பலியாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

manel

Related Posts