பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ரணிலும் அனுரவும் பொய் கூறுகிறார்கள்! பழனி திகாம்பரம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ரணிலும் அனுரவும் பொய் கூறுகிறார்கள்! பழனி திகாம்பரம்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700ரூபாய் சம்பள விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களும் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமாரவும் பொய்கூறி வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இன்று (2) புதன்கிழமை  அக்கரபத்தனை  பிரதேசத்தில்  கட்சியின்  தலைவர்  மற்றும் தலைவிமார்களை சந்தித்து கலந்துரையாடியபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பழனி திகாம்பரம்,கடந்த காலங்களில் நுவரெலியா மஸ்கெலியா பகுதியில் இரண்டு உள்ளுராட்சி மன்றங்கள் மாத்திரமே இருந்தது அதனை அதிகரித்து கொடுத்தது தமிழ் முற்போக்கு கூட்டணி வேறு எந்த கட்சியும் பிரதேச சபைகளை அதிகரிக்கவில்லை இருந்த போதிலும் மக்கள் தமக்கான ஆனையினை வழங்கவில்லை ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை இடம்பெற உள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு நுவரெலியா மாவட்ட மக்கள் ஆனையினை வழங்குவார்கள். 

இந்த அரசாங்கம் ஆட்சி வந்த பிறகு மலையக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை வரவு செலவு திட்டத்தில் மலையக மக்களுக்கு 7000மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அதில் 4500மில்லியன் நிதி இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.

ஆகையால் நாங்கள் இந்தியா  அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டுமே தவிர இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல தேவையில்லை.  

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திப்பதற்கு அனுமதியினை கோரியிருக்கின்றோம் இந்தியா அரசாங்கம் தொடந்து எமக்கு உதவி வழங்கியுள்ளது என்றார்.

manel