பேரூந்தில் பயணித்த 9 பேர் சுட்டுக் கொலை
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், பேருந்தில் பயணித்த 9 பேரை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பேருந்தில், துப்பாக்கியுடன் பிரவேசித்த துப்பாக்கித்தாரிகள், சில பயணிகளை கடத்தி அவர்களை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்களின் உடலங்கள் குண்டுத் துளைத்த காயங்களுடன் மலைகளில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி தாக்குதலுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. அத்துடன் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

