மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்

மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் ஒன்று ரத்தோட்டை பொலிஸ் பிரிவின் கைகாவல இசுருகம பகுதியில் பதிவாகியுள்ளது.  

இன்று (22) அதிகாலை 5.00 மணியளவில் சம்பவம் நடந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. 

கொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் கணவர் இருவரும் மாத்தளை வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.  

அவர்களுக்கு பாடசாலை செல்லும் இரு பிள்ளைகள் (மகள் 11 – மகன் 13) இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 

மனைவியை கொலை செய்ததன் பின் மறைந்திருந்த சந்தேகநபரான கணவர், ரத்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்தோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

manel