இது பழைய அரசியல் செய்யும் நேரமில்லை. நிலைமையின் பாரதூரத்தை அனுரகுமார உணர வேண்டும் – மனோ கணேசன்

இது பழைய அரசியல் செய்யும் நேரமில்லை. நிலைமையின் பாரதூரத்தை அனுரகுமார உணர வேண்டும் – மனோ கணேசன்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அமெரிக்கா விதித்துள்ள வரி குறித்து பாரதூரத்தை ஜனாதிபதி அனுரகுமார உணர வேண்டும் என குறிப்பிட்டு அவரது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்பின் வரி போரின் (tarif war) காரணமாக இலங்கையின் ஏற்றுமதியில் அதிக பங்கை கொண்ட அமெரிக்க சந்தை பறி போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது எமது ஏற்றுமதியில் 23% ஆகும். விரைவில், GSP+ நிபந்தனைகளை எடுத்து கொண்டு ஐரோப்பிய யூனியன் குழு இலங்கை வருகிறது.

ஐரோப்பிய சந்தையும் போனால், நம் நாட்டு ஆடை ஏற்றுமதி தொழில் துறை முழுமையாக ஸ்தம்பிதம் அடையும். புதிய உலக ஒழுங்கின் படி, இன்று பல்தரப்பு (multilateral) உலக மயமாக்கல் ஒப்பந்தங்கள், மெல்ல, மெல்ல, வழக்கழிந்து போவதையும், இரண்டு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர (bilateral) வர்த்தக ஒப்பந்தங்கள் மேல் எழுந்து வருவதையும் இடதுசாரி அனுரகுமார இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். கடந்த கால இலங்கை அரசுகள், இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா, போன்ற பல்வேறு நாடுகளுடன், பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்கள் செய்ய முயன்ற போது, அவற்றை, எதிர்த்து பல்கலைக்கழக மாணவர், தொழிற்சங்க படை ஆகியவற்றை தெருவில் இறக்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தடுத்த தமது பாவத்தை கழுவ வேண்டிய நிலைமைக்கு இன்று JVP தள்ள பட்டுள்ளது.

இது பழைய அரசியல் செய்யும் நேரமில்லை. நிலைமையின் பாரதூரத்தை அனுரகுமார உணர வேண்டும்.

இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற உலகின் முன்னேறிவரும் பொருளாதார சக்திகளுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்கள் செய்ய ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க முன் வர வேண்டும்.

manel