மகா சமன் ஆலயத்தின் பொறுப்பாளர் குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு.

மகா சமன் ஆலயத்தின் பொறுப்பாளர் குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு.

சபரகமுவ மகா சமன் ஆலயத்தின் தற்காலிக பொறுப்பாளராக எஸ்.வி. சந்திரசிங்கவை நியமிப்பதற்கு பௌத்த விவகார ஆணையாளர் எடுத்த முடிவை செயல்படுத்துவதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை மேன்முறியீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் 11ம் திகதி அன்று நடைபெற உள்ள ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமேவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் அவர் வாக்களிப்பதை தடுக்கும் மற்றொரு இடைக்கால தடை உத்தரவையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மகா சமன் ஆலயத்தின் முன்னாள் பஸ்நாயக்க நிலமே மிகார ஜயசுந்தர, பஸ்நாயக்க நிலமே சங்கத்தின் தலைவர் ஹேமந்த பண்டார ஹேரத் மற்றும் செயலாளர் பிரியந்த பண்டார ஜயசுந்தர ஆகியோர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

manel