மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று (01) யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பொது மக்கள் வழங்கிய தகவலின் அடுத்தே குறித்த சடலம் பொலிஸார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

டயகம, போட்மோர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

குறித்த சடலம் விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.03.2025 ) முதல் காணாமல் போய் இருந்த நிலையில் டயகாம பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர்த் தேக்கத்தில் எறியப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

செ.திவாகரன்

manel