கண்டி, புசல்லாவையில் பிரதி அமைச்சர்

கண்டி, புசல்லாவையில் பிரதி அமைச்சர்

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சரின் ஆலோசகரும் பிரத்தியேக செயலாளர் தேசிய மக்கள் சக்தியின் உயர்பீட உறுப்பினருமான கலாநிதி P.P சிவபிரகாசம் அவர்களின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு நேற்று (12) கண்டி மாவட்டம் புசல்லாவ நகரில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களும் கலந்து கொண்டார்.

இதேவேளை புசல்லாவ பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டு அம்மக்கள் எதிர்கொள்கின்ற அடிப்படை பிரச்சனைகளை அமைச்சர் அவர்களிடம் முன் வைத்திருந்தார்கள்.

அமைச்சர் அவர்கள் மக்களோடு கலந்தாலோசித்து இது சம்பந்தமாக தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

manel