விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது

பேலியகொட பகுதியில் டி-56 துப்பாக்கியுடன் ஒருவர் கிரிபத்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, குறித்த நபர் நேற்று (21) மாலை கைது செய்யப்பட்டார். 

அவரிடம் இருந்து ஒரு டி-56 துப்பாக்கி, 30 தோட்டாக்கள் மற்றும் 5 கிராம் 560 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. 

சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். 

எனினும், குறித்த நபர் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்றும் பின்னர் இராணுவத்தால் புனர் வாழ்வளிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்றும், அவர் குற்றம் செய்யவே துப்பாக்கியுடன் வந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்

manel

Related Posts