இந்தோனேசியா உயர்தூதகரத்தின் தூதுவருடன் சந்திப்பு!

இந்தோனேசியா உயர்தூதகரத்தின் தூதுவருடன் சந்திப்பு!

இலங்கைக்கான இந்தோனேசியா உயர் தூதரகத்தின் தூதுவர் தேவீ கெஸ்டினா டெப்பிங் மற்றும் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் K.V.சமந்த வித்யாரத்தன பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்தரகீர்த்தி அமைச்சின் இணைப்புச் செயலாளர் சிவனேசன் ஆகியோர்களுக்கிடையிலான இலங்கையின் பெருந்தோட்ட விவசாய மற்றும் தெங்கு உற்பத்திகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் (17) அன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

இவ் கலந்துரையாடலின் போது….

இலங்கையின் பெருந்தோட்ட விவசாயத் துறையில் காணப்படுகின்ற வளர்ச்சி விசேடமாக தெங்கு ,நெல் ,சோளம், உற்பத்திகளில் இரு நாடுகளுக்கு இடையிலான அனுபவங்கள் மற்றும் ஒத்துழைப்புகள் தொடர்பாகவும்,

இலங்கையில் ஏற்றுமதி பயிர்களில் ஒன்றுதான் தெங்கு இருப்பினும் எமது நாட்டின் தற்போது தெங்கு உற்பத்தியானது அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது.

எமது புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் நாம் தீர்மானித்துள்ளோம் எதிர்காலத்தில் உற்பத்தினை அதிகரித்து ஏற்றுமதியினை மேற்கொள்வதற்கும்.

தற்போது இலங்கையின் வருடத்திற்கு 3000 மில்லியன் தெங்குகளின் தேவைப்பாடுகள் உள்ள போதிலும் கடந்த வருடம் உற்பத்தியானது 2750 மில்லியன் மாத்திரமே, 2030 ஆம் ஆண்டளவில் 4200 மில்லியன்கள் தேங்காய்கன் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளுக்கான ஓர் முன் ஆயத்தமே இவ் கலந்துரையாடல் என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

அத்தோடு தெங்கு உற்பத்தியில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தல், அதனோடு இணைந்த இதர உற்பத்திகளை விருத்தி செய்தல் தொடர்பாகவும் இரசாயன உரங்கள் மற்றும் சேதன பசளைகள் மூலம் எவ்வாறான பயன்களை பெற்றுக் கொள்வது, சோளம் மற்றும் நெல் உற்பத்திகளில் எவ்வாறு தன்னிறைவை அடைவது தொடர்பாக தூதுவரும் அமைச்சர்களும் விரிவாக கலந்துரையாடினார்கள்.

தற்போது இலங்கையின் தெங்கு உற்பத்தியாளர்கள் , ஏற்றுமதியாளர்களுக்கு இந்தோனேசியாவில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல், இலங்கையின் கட்டு பொல் (பாம் ஒயில்)உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் நன்மை தீமைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் ,

விசேடமாக ஜனாதிபதி அவர்களை இந்தோனேசியாவிற்கான உத்தியோகபூர்வவிஜயமொன்றை மேற்கொள்ளுமாறு தூதுவர் தேவீ கெஸ்டினா டொபிங் அவர்கள் அழைப்பும் விடுத்திருந்தார்.

manel