இந்தியா ஈரோடு மாவட்டத்தில் பிரதி அமைச்சருக்கு அமோக வரவேற்பு..!

இந்தியா ஈரோடு மாவட்டத்தில் பிரதி அமைச்சருக்கு அமோக வரவேற்பு..!

இந்தியா ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் கௌரவ பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் திரு. சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களுக்கு அமோக வரவேற்பு..!

இலங்கையின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான திரு.சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள்இன்று 13-1-2025 ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் அலுவலகத்திற்கு சென்றிருந்தார்.

இதன் போது அமைச்சர் அவர்களுக்கு “மார்க்ஸ் – ஏங்கெல்ஸ்” எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மற்றும் கட்சியின் நூற்றாண்டில் ஜனசக்தி வெளியிட்ட நூற்றாண்டு மலர் வழங்கி வரவேற்றதோடு*நகர செயலாளர் ப.மா.பாலமுருகன் அறிமுக உரையாற்றினார்.

வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன் வாழ்த்துரையும் வழங்கியிருந்தார். பிரதி அமைச்சர் அவர்களின் உரையின் போது இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் பங்களிப்பு குறித்தும் மக்களின் எழுச்சி போராட்டம் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார்.

நிகழ்வில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கே.சந்திரசேகர், எஸ்.கந்தசாமி,நகர மன்ற துணை தலைவர் சி.மணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.சுரேஷ்குமார், தி.கண்ணன், நகர துணை செயலாளர் இ.சண்முகசுந்தரம், நகரக்குழு உறுப்பினர்கள் எம்.நாகராஜன், என்.செந்தில்குமார், கே.சரவணன், எம்.கார்த்திகேயன், கே.கே.மாணிக்கம்,பி.ஏ.கோவிந்தன் ,கோடையிடி குப்புசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சி.எம்.செல்லமுத்து,வி.சி.க.கட்சி சசிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

manel