இந்தியப் பிரதமர் மோடி குவைத் விஜயம்..!

இந்தியப் பிரதமர்  மோடி குவைத் விஜயம்..!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று 21 ஆம் திகதி குவைத் நாட்டுக்கு விஜயம் செய்கிறார்.

குவைத் அமிர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் விஜயம் செய்யும் பிரதமர் மோடி இன்றும் நாளை 22 ஆம் திகதியும் குவைத்தின் மன்னர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார்.

கடந்த 43 வருட காலப்பகுதியில் இந்தியத் தலைவர் ஒருவர் குவைத் நாட்டுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

manel