இந்திய உயர்ஸ்தானிகர் முன்னாள் ஜனாதிபதி சந்திப்பு.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
5கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம் பெற்றது.
இந்த சந்திப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசமும் பங்கேற்றுள்ளார்.தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான உறவுகளை இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது நினைவு கூர்ந்தார்.

