அமெரிக்கா சென்றடைந்தார் இந்திய பிரதமர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி பிரான்ஸ் சென்ற இந்திய பிரதமர் தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானை சந்தித்த பிரதமர் மோடி இருநாட்டு உறவு, வர்த்தகம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பிரான்ஸ் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டார். பிரான்சின் மெர்சிலி நகரில் இருந்து விமானம் மூலம் இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
விமான நிலையம் சென்ற பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தார்.
தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்ட பிரதமர் மோடி இந்திய நேரப்படி இன்று அதிகாலை வொஷிங்டன் டிசி நகருக்கு சென்றடைந்தார்.
மோடிக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் அவரை வரவேற்க திரண்டதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை சந்திக்கிறார்.

