இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு
இந்தோனேசியாவின் லெவோடோபி மலையில் நேற்று (17) எரிமலை வெடித்துச் சிதறியுள்ளதைத் தொடர்ந்து, சாம்பல்கள் வெளியேறி வருவதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின், ஃப்ளோரஸ் தீவில் உள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை வெடித்துள்ளது.
குறித்த எரிமலை வெடிப்பின் காரணமாக அப்பகுதியில், 11 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாம்பல் படலம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக எரிமலையின் 7 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

