அமூர் ப்ரொடக்ஷன்ஸ் வெளியிட்ட “ஹே மோனாலிஷா ” பாடல் வெளியீடு
தற்போது நவீன காலத்தில் தீவிரமாய் இயங்கி வரும் நுவரெலியாவில் இயக்குனர், ஒளிப்பதிவாளர், புகைப்படப்பிட்டிப்பாளர், எடிட்டர், நடிகன், மற்றும் அமூர்.lk, ஸ்டூடியோ அமூர். அமூர் event planner, அமூர் production ஆகிய நிறுவனங்களை நடத்தி வரும் சுபாஷ் அமூர் தயாரிப்பில் மற்றுமொரு சரித்திர சாதனையாக “ஹே மோனாலிஷா” எனத் தொடங்கும் பாடலுக்கான வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.


அமூர் production வெளியீடு செய்த “ஹே மோனாலிஷா” என்ற காணொளி பாடல் மார்ச் மாதம் 26ம் திகதி மிகவும் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது.
இயக்குநர் சுபாஷ் அமூர் இயக்கத்தில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது , இப்பாடலுக்கு ஏ,எஸ் ஜீவன் இசையமைப்பாளராகவும், மோனி மற்றும் கனிஸ்டர்ஸ் துணை நடிகர்களாக நடித்திருக்கிறார்கள் அழகு கலை நிபுணராக நித்தியும் இணைந்துள்ளார்.
இப்பாடல் வெளியாகிய நாள் முதல் இன்றுவரை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது ஆதரவும் கிடைத்து வருகிறது.
இந்த பாடல் காணொளியை முழுமையாகபார்வையிட க்ளிக் செய்க.

