ஹவாய் தீவில் வெடித்து சிதறிய எரிமலை வெடிப்பு
அமெரிக்காவின், ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.
இதன் காரணமாக எரிமலையிலிருந்து 1000 மீற்றர் உயரத்திற்கு தீக்குழம்பு வெளியேறியுள்ளது.
அதிலிருந்து வெளியேறிய சாம்பல், அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்காவில் பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பூங்கா மூடப்பட்டது.
மேலும், எரிமலையைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

