ஹட்டனில் கொண்டாடப்பட்ட ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை.
முஸ்லிம்களின் தியாகத் திருநாளான புனித ஹஜ் பெருநாள் நாடு பூராகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் இன்று (07) ஹட்டன் ஜூம்மா பள்ளிவாசலில் மௌலவி சாஜகான் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.






இதில் பிரதேசத்தில் உள்ள இஸ்லாமியப் பக்தர்கள் மிகவும் சமயத்திற்கு மதிப்பளித்து மிகவும் உணர்வுப்பூர்வமாகத் தொழுகையில் ஈட்டுப்பட்டனர் மேலும் பெருநாள் தொழுகையினை தொடர்ந்து ஒருவருக்குக் கட்டித்தழுவி பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.
குறித்த நிகழ்வில் பொலிஸாரினால் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

