துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி
ஜா-எல பமுணுகம, மோகன்வத்த கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (20) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிதாரி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிசார் அடையாளம் கண்டுள்ள நிலையில் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

