தனியார் பேருந்து, அரச பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து – 30 பேர் காயம்
பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்து ஒன்றும் அரச பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து இன்று (29) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

