பனை சார் தொழில் துறைக்கான இயந்திரங்கள் உருவாக்கும் நிறுவனத்தில் பிரதியமைச்சர்..!
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (19) யாழ் மாவட்டத்திலுள்ள பனை சார் தொழில் துறையோடு சம்மந்தப்பட்ட இயந்திரங்களை உருவாக்கும் சிவ கெங்கா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இதில் பனை அபிவிருத்தி சபை தலைவர் சகாதேவன் அவர்களும் கலந்து கொண்டார்.இவ்விஜயத்தில் போது, அமைச்சர் நிறுவனத்தின் தலைவருடன் கலந்துரையாடி, எதிர்காலத்தில் தனது அமைச்சின் கீழ் இவ்வாறான இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.



