முகப்புத்தக செயலிக்கு தடை

முகப்புத்தக செயலிக்கு தடை

அவுஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடாக பப்புவா நியூ கினியா உள்ளது.

சுமார் 20 இலட்சம் மக்கள் தொகை வசிக்கும் இந்த நாடு சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனது, இந்நிலையில் பொதுமக்கள் சமூக வலைதளமான பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்களாம், சுமார் 13 இலட்சம் பேர் பேஸ்புக்கில் கணக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். 

மேலும், பேஸ்புக் மூலமாக போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் அதிகளவில் பரப்பப்படுவதாக முறைப்பாடுகள் எழுந்துள்ள நிலையில் அத்தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக்குக்கு தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகி வந்தது. 

இந்நிலையில், பப்புவா நியூ கினிவாவில் பேஸ்புக்குக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பேஸ்புக்கை பயன்படுத்த முடியாமல் சிரமமடைந்துள்ளனர்.

இது மக்களின் கருத்து சுதந்திரத்தையும், பேச்சுரிமையையும் பறிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

manel