கடந்த 6 மாதங்களில் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

கடந்த 6 மாதங்களில் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது.

இது 8,337.86 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை பதிவு செய்துள்ளது.

இது 2024 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 6.70% வீத வளர்ச்சியாகும். 

இது தொடர்பாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொருட்கள் மற்றும் சேவைகள் உட்பட மொத்த ஏற்றுமதிகள் 2025 ஜூன் மாதத்தில் 1,460.34 மில்லியனை எட்டியுள்ளன.

இது ஜூன் 2024 உடன் ஒப்பிடும்போது 8.73% வளர்ச்சியைக் குறிக்கிறது. 2025 ஜூன் மாதத்தில் மாத்திரம் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 6.85% அதிகரித்து 1,150.73 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் சரக்கு ஏற்றுமதி 6,504.72 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டுள்ளது.

இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.86% வீத அதிகமாகும். 

2025 ஜூன் மாதத்தில் சேவை ஏற்றுமதியின் வருமானம் 309.61 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 16.38% வீத அதிகரிப்பாகும். 

வருடத்தின் முதல் 6 மாதங்களில் சேவை ஏற்றுமதிகள் 9.78% வீதம் அதிகரித்து 1,833.14 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (ICT)/வணிக செயல்முறை முகாமைத்துவம் (BPM), கட்டுமானம், நிதி சேவைகள் மற்றும் போக்குவரத்து மற்றும் தளபாடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சேவைகளின் ஊடாக, நாட்டின் ஏற்றுமதித் துறையை பன்முகப்படுத்தி நாடளாவிய ரீதியாக தொழில் வாய்ப்புகளை உருவாக்குகிறது.

manel