நெலுவ பிரதேச சபை ஊழியர்கள் பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்
நெலுவ பிரதேச சபை ஊழியர்கள், அரசுக்கு சிறந்த சேவை வழங்குவதற்கு தமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரி, நெலுவ பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக நெலுவ பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நெலுவ பிரதேச சபை ஊழியர்கள் மொரவக்க வீதியிலிருந்து சுற்றுவட்டத்திற்கு வந்த நிலையில், பிரதேச செயலகம் மற்றும் கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள் பெலவத்தை வீதியிலிருந்து சுற்றுவட்டத்தை நோக்கி வந்தடைந்தனர்.
இரு தரப்பினரும் நெலுவ பேருந்து நிலையத்தில் ஒன்றிணைந்து மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

