உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக அறிவிப்பு

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு தகுதி பெற்றவர்களுக்கு மேலதிகமாக இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2024 ஓக்டோபர் முதலாம் திகதி மற்றும் 2025 பெப்ரவரி மாதம் முதலாம் திகதிகளில் சான்று அளிக்கப்பட்ட துணை வாக்காளர் பட்டியலின்படி புதிய வாக்காளர்கள் உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது, மேலும் இம்முறை உள்ளூராட்சி தேர்தலுக்கு 172,96,330 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை , உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அனைத்து ஆரம்ப ஏற்பாடுகளும் முடிவடைந்துள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது நாளை முடிவடையும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றன.

எனவே, அஞ்சல் மூலம் வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களும் நாளைய தினத்திற்கு முன்னர் தங்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

manel