மதியம் வரை 30வீத வாக்களிப்பு
இன்று (06) மதியம் 12 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 30% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இன்று மாலை 4 மணி அளவில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,
மாத்தறை – 42%
மன்னார் – 40%
திருகோணமலை – 36%
பதுல்லா – 36%
காலி – 35%
யாழ்ப்பாணம் – 35%
பொலன்னறுவை – 34%
கேகாலை – 33%
கண்டி 33%
அம்பாறை – 31%
இரத்தினபுரி – 30%
புத்தளம் – 30%
அநுராதபுரம் – 30%
கொழும்பு – 28%

