தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டம் இன்று
தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்று இன்று (27) நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து முடிவு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி அமைச்சினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி கூட உள்ள நிலையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

