பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் கிரிபண்டலாகே நிலந்த மதுரங்க ரத்நாயக்க என்ற கல்னேவ, நவநகரப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சந்தேக நபர் நேற்று முன்தினம் பிறிதொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் இருந்து விடுதலைப் பெற்று வந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

34 வயதுடைய குறித்த சந்தேகநபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்பதோடு, அவர் கல்னேவ விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வைத்தியரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பின்னர் அவரது இரண்டு கையடக்க தொலைபேசிகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார், மேலும் காணாமல் போன தொலைபேசியின் இருப்பிடம் குறித்து கிடைத்த சமிக்ஞைகளின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, அவுகன ரயில் நிலையம் அருகே கையடக்க தொலைபேசி சமிக்ஞைகள் இல்லாததால், அப்பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கல்னேவ பொலிஸ் விசேட குழுவினர் கல்னேவ, எலபதுகம பகுதியில் மறைந்திருந்து சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

manel