தேசபந்து தென்னகோனை தேட ஆறு விசாரணைக் குழுக்கள்
பொலிஸ்மா மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது.
தென்னகோனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையாலேயே குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது.
தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக இதுவரை அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் குழுக்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.

