டெங்கு மற்றும் சிக்குன்குன்யாவை கட்டுப்படுத்த செயலணி

டெங்கு மற்றும் சிக்குன்குன்யாவை கட்டுப்படுத்த செயலணி

தற்போது பரவி வரும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக செயலணி ஒன்றை நியமித்துள்ளதாக மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளர் எல்.ஏ. கலுகபுஆரச்சி  தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் 50% அதிகமானவர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கீதிகா ரத்னவர்தன இது குறித்து தெரிவிக்கையில்,

மொத்த எண்ணிக்கையில் 1,800 பேர் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் இருந்து பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், டெங்கு நோய் அபாயம் உள்ள 70,000 வீடுகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும்,

471 வீடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

manel