இன்று சர்வதேச அகதிகள் தினம்

இன்று சர்வதேச அகதிகள் தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி சர்வதேச அகதிகள் தினம் நினைவுகூறப்படுகிறது. 

2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொது சபையின் விசேட தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, சர்வதேச அகதிகள் தினமாக இன்றைய தினம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

பல்வேறு மோதல்களுக்குள் சிக்குண்டு அகதிகளாக வசிக்கும் நாட்டினுள், அல்லது பிற நாடுகளில் என இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும். 

இன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூக சூழல்களால் ஏதிலிகளாக அல்லலுறுபவர்ளை நினைவு கூரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 

manel

Related Posts