இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து கோப் குழு!
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் சுங்கப் பிரிவினரின் பொறுப்பில் வைக்கப்படுவது குறித்து அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் அவதானத்திற்கு கொண்டுவரப்பட்டது.
சமீபத்தில் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் குறித்த குழு பாராளுமன்ற வளாகத்தில் கூடியது.
இது தொடர்பில் கருத்து வௌியிட்ட கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இலங்கையின் மிக முக்கியமான நிறுவனமொன்றுக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இது சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்டில் ஒரு முக்கிய கட்டுரையாக இருந்தது. நான் அதைப் படித்தேன்.
சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்டில் இவ்வாறு கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
சில நாடுகளில் வரி கட்டமைப்புகள் இருப்பதால் சிங்கப்பூர், நேபாளம் மற்றும் இலங்கை ஆகியவை அவ்வாறான வரி அமைப்புகளைக் கொண்டுள்ளன, அவை வரிகளைக் குறைக்கும் வகையில் இயந்திர திறனை வடிவமைத்துள்ளன. உதாரணத்திற்கு, அந்த செய்தியில் BYD என்ற வாகனம் உள்ளது, அது சில நாடுகளுக்கு 150 கிலோவாட்டுக்கு செல்கிறது. அதே வாகனம் மற்ற நாடுகளுக்கு 100 கிலோவாட்டுக்கு செல்கிறது.
எனவே இதன் உண்மையான கிலோவோட்டை கண்டறிவதற்காக, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப முறை இலங்கையில் காணப்படுகிறதா?
சுங்கத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட கருத்து வௌியிடுகையில்,
அதைச் செய்வதில் நமக்குப் பெரிய பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன். இங்கு பிரச்சினை என்னவெனில், நமக்குத் தேவையான ஒத்துழைப்பு விரைவில் கிடைக்காது. அப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது. எனவேதான் இயந்திரத்தை சோதனைக்கு உட்படுத்த கூறினோம்.
இதை வாகனத்திலிருந்து அகற்ற வேண்டும் என்கிறார்கள். இதிலிருந்து மீள்வதற்கு ஒரு வழி இருக்கிறது. நிபுணர்கள் அதற்கு வர வேண்டும்.

